Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 15….!!

 

இன்றைய தினம் : 2019 மார்ச் 15

கிரிகோரியன் ஆண்டு : 74ஆம் நாளாகும்.

ஆண்டு முடிவிற்கு  : 291 நாட்கள் உள்ளன

 

இன்றைய தின நிகழ்வுகள்:

கிமு 44 – உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.

933 – பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.

1493 – கொலம்பஸ் அமெரிக்காக்களுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு எசுப்பானியாதிரும்பினார்.

1564 – முகலாயப் பேரசர் அக்பர் “ஜிஸ்யா” எனப்படும் தலைவரியை நீக்கினார்.

1776 – தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.

1802 – இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.

1815 – நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.

1819 – பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல் ஒளி ஒரு அலை போல் செயல்படுகிறது என நிறுவினார்.

1820 – மேய்ன் ஐக்கிய அமெரிக்காவின் 23வது மாநிலமாக இணைந்தது.

1848 – அங்கேரியில் புரட்சி வெடித்தது. ஆப்சுபேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

1877 – முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் ஆரம்பமானது.

1888 – ஆங்கிலோ-சிக்கிம் போர் ஆரம்பமானது.

1917 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முடி துறந்தார். 304-ஆண்டுகால ரொமானொவ் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.

1921 – உதுமானியப் பேரரசின் முன்னாள் பிரதமரும், ஆர்மீனிய இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான தலாத் பாசா பெர்லினில் ஆர்மீனியர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.

1922 – எகிப்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த பின்னர் முதலாம் புவாட் எகிப்தின் மன்னனானார்.

1931 – வைக்கிங்கு என்ற கப்பல் நியூபவுன்லாந்து அருகே வெடித்ததில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையினர் உக்ரேனின் கார்க்கொவ் நகரை சோவியத்இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.

1951 – ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.

1961 – தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது.

1970 – எக்ஸ்போ ’70 உலகக் கண்காட்சி சப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது.

1978 – சோமாலியா, எத்தியோப்பியாவிற்கிடையேயான போர் முடிவுக்கு வந்தது.

1985 – முதலாவது இணைய ஆள்களப் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.

1986 – சிங்கப்பூரில் நியூ வேர்ல்ட் என்ற உணவு விடுதி இடிந்து வீழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்தனர்.

1990 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று அரசுத்தலைவராகத் தெரிவானார்.

1991 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து ஜேர்மனி முழுமையான விடுதலையைப் பெற்றது.

2004 – சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.

2007 – இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

2011 – சிரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

இன்றைய தின பிறப்புகள்:

270 – நிக்கலசு, கிரேக்கக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (இ. 343)

1767 – ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது அரசுத்தலைவர் (இ. 1845)

1854 – எமில் அடால்ஃப் வான் பெர்ரிங், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1917)

1860 – வால்டெமர் ஆஃப்கின், உருசிய-சுவிட்சர்லாந்து நுண்ணுயிரியலாளர் (இ. 1930)

1914 – எஸ். எம். சுப்பையா நாயுடு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1979)

1915 – அழகு சுப்பிரமணியம், ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் (இ. 1973)

1919 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (இ. 2014)

1929 – செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன், தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 2013)

1930 – சொரேசு ஆல்ஃபியோரொவ், நோபல் பரிசு பெற்ற பெலருசிய-உருசிய இயற்பியலாளர்

1930 – மார்ட்டின் கார்ப்பிளசு, நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர்

1934 – கன்சிராம், இந்திய அரசியல்வாதி (இ. 2006)

1938 – தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் (இ. 2012)

1941 – மைக் லவ், அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர்

1950 – கே. வி. தங்கபாலு, தமிழக அரசியல்வாதி

1956 – ஓவியர் ஜீவா, தமிழக ஓவியர், திரைப்பட விமர்சகர், எழுத்தாளர்

1959 – ரென்னி ஹர்லின், பின்லாந்து இயக்குநர்

1975 – வெசிலின் தோப்பலோவ், பல்கேரிய சதுரங்க வீரர்

1986 – ஜெய் கோர்ட்னி, ஆத்திரேலிய நடிகர்

1993 – அலீயா பட், பிரித்தானிய நடிகை, பாடகி

இன்றைய தின இறப்புகள்:

கிமு 44 – யூலியசு சீசர், உரோமக் குடியரசுத் தளபதி (பி. கிமு 100)

220 – சாவோ சாவோ, சீன கான் வம்ச மன்னர், இராணுவ அதிகாரி (பி. 155)

931 – ஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை)

1206 – கோரி முகமது, கோரி பேரரசர் (பி. 1149)

1660 – லுயீஸ் டி மரிலாக், பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவியவர், கத்தோலிக்கப் புனிதர் (பி. 1591)

1897 – ஜேம்ஸ் சில்வெஸ்டர், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1814)

1937 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1890)

1939 – தாலமுத்து, இந்தித் திணிப்புக்கு எதிரான செயற்பாட்டாளர் (பி. 1915)

1962 – ஆர்தர் காம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாலர் (பி. 1892)

1983 – ரெபெக்கா வெஸ்ட், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1892)

1991 – அரவிந்தன், மலையாளத் திரைப்பட இயக்குநர் (பி. 1935)

2013 – கள்ளம் அஞ்சி ரெட்டி, இந்திய மருந்தியலாளர், தொழிலதிபர் (பி. 1940)

2015 – நாராயண் தேசாய், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1924)

இன்றைய தின சிறப்பு நாள்:

புத்தியிர்ப்பு, இயற்கைசார் விழா (யப்பான், )

காவல்துறையினரின் வன்செயல்களுக்கு எதிரான பன்னாட்டு நாள்

புரட்சி நினைவு நாள் (அங்கேரி, 1948)

உலக நுகர்வோர் உரிமைகள் நாள்

உலக முசுலிம் கலாச்சார, அமைதி, கலந்துரையாடல், மற்றும் திரைப்பட நாள்

Categories

Tech |