Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மார்ச் 22ஆம் தேதி…. வெளியே வராதீங்க….. 5 மணிக்கு நன்றி சொல்லுங்க ….. மோடி

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அதில் ,

கொரோனா பரவுவதை தடுத்து இந்தியா எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை நிரூபிப்போம் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று மற்றவர்கள் நன்றி சொல்லுங்கள்.

முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும். இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது.தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.

மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலை மக்கள் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வைரஸ் பரவலை தடுத்திட வேண்டும். வீட்டிலேயே இருப்பதன் மூலம் பரவலை வெகுவாக தடுக்க முடியும். கூட்டமாக கூடுவதை தவிர்த்திட வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.

Categories

Tech |