Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மார்ச் 9….. பள்ளி…. கல்லூரிகளுக்கு விடுமுறை…… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடைபெறும் விழாவாகும். இந்த தேரோட்ட நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து விழாவை சிறப்பித்து விட்டு சாமியை தரிசனம் செய்து செல்வர்.

அந்த வகையில் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவிற்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அன்று உள்ளூர் விடுமுறை. இதனை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமை வேலை நாளாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |