Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இந்த தகவல் உண்மையில்லை…. மார்ச் மாதம் நிறைவு பெறும்…. அதிகாரிகளின் தகவல்….!!

குரோம்பேட்டையில் சுரங்கப்பாதை பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கேற்ப இலகு ரக வாகன சுரங்கப்பாதை கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்தத் திட்டம் நிறைவு பெறாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இலகு ரக வாகன சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கு குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி தலைமையில். போக்குவரத்துதுறை அதிகாரிகள் இந்த சுரங்கப் பாதை பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டுள்ளார். அதன்பின் பணிகளை ஆய்வு செய்த போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒரு வழி சுரங்கப்பாதை என்ற தகவல் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த சுரங்கப்பாதை இரு வழிப்பாதையாக வருகின்ற மார்ச் மாதத்திற்குள் நிறைவுபெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |