Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் மிதந்து வந்த…. மாரியம்மன் சிலை…. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு…!!

தாமிரபரணி ஆற்றில் அம்மன் சிலை மிதந்து வந்ததையடுத்து காவல்துறையினர் சிலையை மீட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பக்கத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் முன்பு தாமிரபரணி ஆற்றில் மாரியம்மன் சிலை ஒன்று கிடப்பதாக முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் சுமார் 2 அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலையை மீட்டுள்ளனர். அதன் வலது கையில் உடுக்கையும், அதே கையில் வாளும், வலது காய் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த சிலை கிடந்த  கைலாசநாதர் கோவில் பக்கத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

பின்பு அந்த சிலையை குறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் முறைப்படி அந்த சாமி சிலையை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கவும் ஏற்பாடு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் அம்மன் சிலை மிதந்து வந்துள்ளதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |