Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி மெரினால இவங்க கடை நடத்த அனுமதி இல்லை….. சென்னை நீதிமன்றம் எச்சரிக்கை….!!

மெரினாவில் கடை வைத்துள்ளவர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தும், கோடிக்கணக்கான செலவில் பல நலத்திட்டங்கள் செய்யவும்  சென்னை நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. 

சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினித் சுரேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சென்னை மெரினா கடற்கரையில் தற்போது வரை 1962 கடைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு 900 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கி இருப்பதாகவும் அதற்காக 27 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் 900 வண்டி கடைகள் அமைத்து கொடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வாகன நிறுத்தத்தை பொருத்தவரையில் 457 கார்கள் 2271 இருசக்கர வாகனங்கள் 80 பேருந்துகளை நிறுத்தும் வகையில் ராணிமேரி கல்லூரி கலைஞர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மெரினாவை சுத்தப்படுத்த 175 பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும்  6 இடங்களில் அதி நவீன கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த உள்ளதாகவும் மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் மீன் வியாபாரிகளுக்கு 66 லட்சம் ரூபாய் செலவில் 300 மீன் விற்பனை கடைகள் வைக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்த நீதிபதிகள் உணவு பாதுகாப்பு விதிகளை மீறி செயல்படுபவர்களையும் உணவு விற்பனைக்கான தரச் சான்றிதழ் பெறாதவர்களையும் மெரினாவில் கடைகள் நடத்த அனுமதிக்கவே கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து மேற்கண்டவை குறித்து விரிவான பதிலளிக்க கால அவகாசம் வழங்கி விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Categories

Tech |