Categories
உலக செய்திகள்

பரிதாப நிலையில் மரியுபோல் நகர்…. விதிகளில் கிடக்கும் சடலங்கள்…. கழிவுநீரை குடிக்கும் மக்கள்…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகர், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவிற்கு புகழ் வாய்ந்ததாக இருந்த நிலையில் தற்போது அங்கு மீதமிருக்கும் மக்களின் நிலை பரிதாபமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் தலைநகரை ஆக்கிரமிக்க ரஷ்ய படையினர் கடுமையாக முயன்றனர். ஆனால் அது நடக்காததால் மரியுபோல என்னும் துறைமுக நகரத்தை அழிக்க தொடங்கினர். ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல் காரணமாக, அந்தநகரில் இருக்கும் வீடுகள் மண் மேடாகியது.  ரஷ்ய படையினர் அந்நகரத்தை விட்டு வெளியேறி விட்டனர்.

எனினும், அங்கிருந்து சடலங்கள் மீட்கப்படவில்லை. உடல் பாகங்கள் துண்டாகி போன நிலையிலும் அழுகிப்போன நிலையிலும் வீதிகளில் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கழிவு நீரை அருந்தும் நிலையில் இருக்கிறார்கள். எனினும் உக்ரேன் அரசு ,அந்நகரை மீட்கும் பணிகளை தொடங்கியிருக்கிறது. அங்கு, குப்பைத்தொட்டிகளில் பிணங்கள் கிடப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இருப்பினும் தகுந்த உதவியை அங்கு வசிக்கும் மக்களுக்கு செய்ய இயலவில்லை. மருத்துவ உதவிகள் இல்லாததால் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். மருத்துவர்களும், தகுந்த மருந்துப்பொருட்கள் இல்லாதால் சிகிக்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். சுற்றுலாத்தலமாக காட்சியளித்த மரியுபோல் நகர், தற்போது பரிதாப நிலையில் இருக்கிறது.

Categories

Tech |