மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. எனவே சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர். இதனையடுத்து கொரோன தடுப்பு நடவடிக்கைகளை கோவில் நிர்வாக சார்பாக செயல் அலுவலர் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி பூசாரி, அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் போன்றோர் செய்திருந்தனர்.
அதேபோன்று சாத்தூரில் முக்குராந்தல்லில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோன்று படந்தால் துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அங்கு அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.