Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் நடைபெறவிருக்கும் கும்பாபிஷேகம்…. விறுவிறுப்பாக நடைபெறும் பணி…. ஆர்வமுடன் வேலைபார்க்கும் தொழிலாளர்கள்….!!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரத்தில் சாரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த சில மாதங்களாக 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கோவிலில் ஒவ்வொரு நிலையிலும் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டு பல மாதங்களாக வர்ணம் தீட்டும் பணியும் நடைபெற்று வந்துள்ளது. இந்த பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அடுத்த மாதமான ஜூலை 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகப் பணிகள் கோவிலில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆயிரக்கணக்கான சவுக்கு கட்டைகளால் கட்டப்பட்ட சாரம் பிரிக்கும் பணி தரைதளத்தில் இருந்து 7 நிலைகள் வரை நடந்து வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |