டெல்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூகர்பெர்க், ஒரே நாளில் 31 பில்லியன் டாலரை இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தையில் மார்க் ஜூகர்பெர்க்கின் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற முன்னணி இணையதள நிறுவனங்களை உள்ளடக்கி இருக்கும் மெட்டா நிறுவனத்தை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, அதன் சந்தை மதிப்பு சரிவடைந்திருக்கிறது. நியூயார்க் மாகாணத்தின் பங்குச்சந்தையில் நேற்று முன்தினம் மெட்டா நிறுவன பங்குகள் சுமார் 24% சரிவடைந்தது. இதற்கு பிற இணையதளங்களுடனான போட்டி தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலரிலிருந்து 92 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது. இதன்மூலம் கடந்த 2015ஆம் வருடத்திலிருந்து உலகின் முதல் 10 பணக்கார பட்டியலில் இடம்பிடித்து வந்த அவர், அந்த பட்டியலிலிருந்து வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறார்.