Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி எல்லாம் அடைப்பு… அதிகாரி எடுத்த முடிவு… தொற்றினால் ஏற்பட்ட விளைவு..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மேட்டூர் உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் காவிரி நகர் பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. அந்த உழவர் சந்தைக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் விற்பதற்காக பொருட்களை எடுத்து வருவதுடன் சந்தையில் பொருட்கள் வாங்க மேட்டூர் மற்றும் கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொது மக்கள் சந்தைக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேற்று நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இன்று முதல் உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட் காய்கறி கடைகள் மற்றும் மேட்டூர் பொதுஜன சேவா சங்க பள்ளியில் இயங்கி வந்த காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்தையும் மூட அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |