மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் விசைத்தறி கூலி பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் கூலி உயர்வு பிரச்சினை குறித்து விளக்கி பேசினார்.
அதில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இதனால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட கூலி உயர்வை வழங்க வேண்டும் என்றும் கூறினார். இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தலைவர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.