மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் வாகையடி முக்கு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தாலுகா செயலாளர் துரை நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசினார். இதில் நெல்லை மாநகரம் முழுவதும் சேதம் அடைந்துள்ள சாலைகளால் மக்கள் படும் சிரமங்கள் குறித்து புகைப்படங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனரை காட்சிப்படுத்தினர்.
மேலும் அவர்கள் சாலைகளை உடனடியாக சீரமைக்கவும் வலியுறுத்தினர். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பலர் பார்த்தனர். இந்த போராட்டத்தில் தாலுகா குழு உறுப்பினர் ராஜேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ ராம், சுடலை ராஜ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.