மாடு மேய்க்கச் சென்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மாடுகளை மேய்த்து வந்துள்ளார், இந்நிலையில் ஜோதியம்மாள் கயத்தாறிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து ஜோதியம்மாள் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் ஜோதியம்மாளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு ஜோதியம்மாளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதியம்மாளின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜோதியம்மாள் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.