லண்டனிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து வந்து அங்கிருப்பவர்களை தாக்குதல் நடத்தியது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை கைது செய்துள்ளார்கள்.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் Asda Clapham junction என்னும் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டினுள் மர்ம நபர் ஒருவர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து கொண்டு நுழைந்துள்ளார். அவ்வாறு நுழைந்த அந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்த பொது மக்களையும், சூப்பர் மார்க்கெட் ஊழியர்களையும் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் மொத்தமாக 6 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அதில் பெண் ஒருவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டதால் அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மற்ற 5 பேருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காவல்துறையினர் 5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளார்கள்.
இதுகுறித்து சூப்பர் மார்க்கெட்டில் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, இது தொடர்பான தகவல்கள் எவருக்காவது தெரிந்து இருந்தால் அதனை காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கும்மாறும், இந்த சம்பவத்தை தாங்கள் சாதாரணமாக விடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.