Categories
உலக செய்திகள்

அதை தரப்போறியா..? இல்லையா…? ரயில்நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… புகைப்படத்துடன் வெளியான முக்கிய தகவல்…!!

லண்டன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் பறிக்க முயன்ற மர்ம நபர்களின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அந்த பயணியிடம் உன் செல்போனை எங்களிடம் கொடு என்று மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார் . எனினும் மர்ம நபர்கள் 2 பேரும் பயணியிடமிருந்து செல்போனை பறித்துக் கொள்ள முயற்சி செய்து இருக்கின்றனர். இந்நிலையில் அந்த பயணி சாமர்த்தியமாக அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார்.

பின்னர் அந்த 2 மர்ம நபர்களும் அங்கு வந்த ரயிலில் ஏறி உள்ளே அமர்ந்திருந்த பயணிகளிடம் மிரட்டி செல்போனை கேட்டுள்ளனர். மேலும் தராதவர்களை அடித்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நடந்துள்ளது. இந்நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களின் சிசிடிவி புகைப்படங்களை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த நபர்களை பொதுமக்கள் யாராவது பார்த்தால் தங்களிடம் வந்து தகவல் தெரிவிக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |