நைஜீரியாவில் காரில் சென்று கொண்டிருந்த 7 நபர்களை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் உள்ள வனவிலங்குகள் பூங்கா ஒன்றிற்கு ஆறு பிரான்ஸ் நாட்டவர்களும், நைஜீரியாவை சேர்ந்த வழிகாட்டி ஒருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து, காரில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆறு பேர் மற்றும் வழிகாட்டி, காரின் ஓட்டுனர் அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்கள் சென்ற கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற தகவல் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டவர்கள் பலியான தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதி செய்துள்ளார். மேலும் அவரது அலுவலகத்தில் நைஜீரிய தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.