அமெரிக்காவில் திடீரென மர்ம நபர் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர்.
அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் நியூ ஆர்லேன்ஸ் நகரம் அமைந்திருக்கிறது. அப்பகுதியில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவயிடத்திற்கு தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொண்டு வருகின்றன. இது வரை யாரையும் கைது செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடந்தது என்று விவரமும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.