மர்ம நபர்கள் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மளிகை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த அடகு கடையில் வெங்கடேசன் கவரிங் நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்க நகைகள் என நினைத்து கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
மறுநாள் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கவரிங் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வெங்கடேசன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.