பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மர்ம நபர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடந்து சென்ற கற்பகம் என்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் சத்தமிட்டுள்ளார். இதனைப்பார்த்த பொதுமக்கள் தப்பியோட முயன்ற இரண்டு நபர்களையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.
அதன்பின் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இரண்டு நபர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி, அகமது நவாஸ் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.