மர்ம நோய் தாக்கியதில் 18 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ராகுல் வளர்த்து வந்த ஆடுகள் மர்மநோய் தாக்கி உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் 2 அல்லது 3 ஆடுகள் என இதுவரை 18 ஆடுகின்ற உயிரிழந்துள்ளது.
இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீதமுள்ள ஆடுகளை காப்பாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், இதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.