Categories
உலக செய்திகள்

மோதிய மர்ம பொருள்…. மூழ்கியிருந்த கப்பல்…. காயமடைந்த கடற்படையினர்….!!

அணு ஆயூத நீர்மூழ்கி கப்பல் மீது மர்ம பொருளொன்று மோதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அமெரிக்க நாட்டிற்குச் சொந்தமான அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஆசிய பசிபிக் கடல் பகுதியில் மூழ்கி இருந்துள்ளது. அப்பொழுது அதனை மர்ம பொருள் ஒன்று தாக்கியுள்ளது.  இதில் சில கடற்படையினர் காயமடைந்துள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கான தெளிவான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

இருப்பினும் நீர்மூழ்கிக் கப்பல் சிறப்பாக இயங்குவதாகவும் அதற்கு எந்தவொரு சேதாரமில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதில் கடற்படையினர் 11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இச்சம்பவமானது தென் சீனக்கடலில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் நடந்துள்ளது.

Categories

Tech |