Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்த மர்ம விலங்கின் நடமாட்டம்…. கடித்து குதறப்பட்ட ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து குதறியதில் 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் விவசாயியான ஈஸ்வரன் என்பவர் அவரது தோட்டத்து சாலையில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். கடந்த 4-ந்தேதி அங்கு கட்டி வைத்திருந்த 8 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது. இதேபோன்று தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான ஆட்டுப்பட்டிக்குள் மர்மவிலங்கு ஒன்று நுழைந்து அங்கிருந்த 72 ஆடுகளை கடித்து குதறியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் ஒரே சமயத்தில் ஆடுகள் கடித்து குதறப்பட்டுள்ளதால் ஒன்றுக்கு மேற்பட்ட மர்ம விலங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் மர்ம விலங்கின் நடமாட்டம் உள்ளதா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெற்றிவேல் நகர் பகுதிக்குள் புகுந்த மர்ம விலங்கு அங்கு வசித்து வரும் மாரிமுத்து என்பவரின் வீட்டிற்கு முன்பு கட்டிவைக்கப்பட்டிருந்த 4 ஆடுகளை கடித்து குதறியுள்ளது. அந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலர் அங்கு வந்த போது அந்த இடத்தில் நாயை விட உருவத்தில் பெரிதாக ஒரு மர்மவிலங்கு சென்றதாக பொதுமக்கள் தரப்பில் கூறியுள்ளனர்.

Categories

Tech |