வானத்தில் இருந்து வித்தியாசமாக கீழே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வடகுபட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ப்பதற்காக வெங்கடேசன் அங்குள்ள வயல்வெளிக்கு சென்ற போது ஏதோ ஒரு மர்ம பொருள் மண்ணில் புதைந்த நிற்பதை பார்த்துள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் 3 அடி நீளம் மற்றும் 10 கிலோ எடையுடன் காணப்பட்ட அந்த மர்மமான பொருளை பார்வையிட்டுள்ளார்.
அதில் ஏராளமான எலெக்ட்ரானிக் பட்டங்கள் காணப்பட்டதோடு, ஆங்கிலத்தில் வெள்ளை நிறத்தில் எச்சரிக்கை என எழுதப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அந்த மர்மமான பொருளை மீட்டு பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று கடற்படை தளத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதனை ஆய்வு செய்த கடற்படை அதிகாரிகள் அது வெடிபொருள் இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும் கடற்படை விமானத்தில் கொண்டு செல்லும் போது அது தவறிக் கீழே விழுந்து விட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.