வீட்டிற்குள் கொள்ளையடிக்க வந்த வந்த மர்மநபர் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அப்பநாய்க்கன்பட்டி பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயாரான ராதா என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் ராதாவை தாக்கிவிட்டு அங்கிருந்த பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற நிர்மலா வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது தாயார் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரை உடனடியாக மீட்டு சூலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் காவல்துறையினர் நீலகிரி மாவட்டம் தேவலா பகுதியில் வசிக்கும் காளிதாஸ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.