Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“திருவிழாவுக்கு தானே போனேன்” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீரனூர் ரயில்வே நிலையத்தில் கேட் கீப்பராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு எதினிப்பட்டியிலுள்ள அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய பாலசுப்ரமணியன் தனது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம்போன்றவற்றை  திருடிச் சென்றுள்ளதை பாலசுப்ரமணியன்அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |