ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள நான்புரா பகுதியில் 40 வயதுடைய டிம்பிள் தேசாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பெற்றோர் திருமணம் செய்வதற்காக வரன்களை பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவருக்கு திருமணத்தில் நாட்டமில்லை என்றாலும், குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார்.
இதனையடுத்து அவர் அதே பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சென்று செயற்கை கருத்தரித்தல் முறையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் முதல் 2 முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், 3-வது முயற்சியில் அவர் கருவுற்றுள்ளார். தற்போது அவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். மேலும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.