Categories
மாநில செய்திகள்

காதலுக்கு வயது இல்லை…. 65 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்த 85 வயது தாத்தா…. வைரல்….!!

மைசூருவில் உதயகிரி கௌசிகா என்னும் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குர்ஷித் பேகம் என்ற மனைவியும் ஒன்பது பிள்ளைகளும் இருந்தனர். இதனை அடுத்து குர்ஷித் பேகம் உடல் நலக்குறைவால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் முஸ்தபாவின் ஒன்பது பிள்ளைகளுக்கும் திருமணமாகி அனைவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் முஸ்தபா தனிமையில் வாழத் தொடங்கினார். இந்நிலையில் முஸ்தபாவிற்கு 85 வயது ஆனதால் தனிமை அவரை வாட்டத் தொடங்கியது.

இதனால் அவர் தனக்கு ஒரு துணை தேவை என்று நினைத்தார். மேலும் அதே பகுதியில் தனிமையில் வசித்து வந்த 65 வயதுள்ள பாத்திமா பேகம் என்ற மூதாட்டியை அவர் சந்தித்து நன்றாக பழகி வந்தார். பின்னர் பாத்திமா பேகத்திடம் முஸ்தபா தனது காதலை எடுத்துக் கூறினார். அதற்கு பாத்திமா பேகம் சம்மதம் தெரிவித்ததால் இவர்களது திருமணம் முஸ்தபாவின் குடும்பத்தார் முன்னிலையில் வீட்டிலேயே எளிமையாக நடைபெற்றது. பின்னர் புதுமண தம்பதிகளிடம் அனைவரும் ஆசி பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |