Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருக்கல்யாண நிகழ்ச்சி….. சிறப்பு அலங்காரத்தில் அம்மன்…. திரளான பக்தர்கள் கூட்டம்….!!

கோவில் குண்டம் திருவிழாவையொட்டி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 12ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது.

இதனை அடுத்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 11 மணிக்கு மூலவருக்கும், பகல் 12 மணிக்கு உற்சவருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் பக்தர்களுக்கு மணக்கோலத்தில் தர்மராஜா திரவுபதி அம்மன் காட்சி அளித்து அருள் வழங்கினர்.

Categories

Tech |