Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் பீரங்கி குண்டு வீச்சு… 7 பேர் உடல் சிதறி பலி…!!!

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் பீரங்கி குண்டு வீசியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவமும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. நேற்று பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது திருமண நிகழ்ச்சி ஒன்றில் பீரங்கி குண்டு வெடித்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதில் பெரும்பாலான சிறுவர்கள். இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் தான் காரணம் என அரசும், அரசு தான் காரணம் என தலிபான் பயங்கரவாதிகள் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர். பொதுமக்களை பாதுகாக்க இரு தரப்பினரும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா சபை வலியுறுத்தி வருகிறது.

Categories

Tech |