கோவையில் போராட்டக்களத்தில் இரண்டும் தம்பதியினர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் இயக்கங்களின் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக்கோரியும் அதனை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றுமாறும் கடந்த மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் அதே பகுதியை சேர்ந்த அப்துல் கலாம், ரேஷ்மா என்கின்ற இளம் தம்பதியினர் பெற்றோர்களின் சம்மதத்துடன் போராட்டகளத்தில் திருமணம் செய்து கொள்ள முன்வந்தனர்.அதன்படி,
மாப்பிள்ளை அப்துல் கலாம் அவரது வருங்கால மனைவியான ரேஷ்மா ஷெரின் என்பவருக்கு 3 பவுன் தங்க நகையை பரிசாக கொடுத்து திருமணம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் போராட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமானோர் மணமக்களை வாழ்த்தினர். போராட்டக்களத்தில் ஒருபுறம் புரட்சிகரமாக இருக்க, மறுபுறம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பதியினர் இவ்வாறு கூறினார்,
எங்களுக்கு திருமணம் நடைபெற்றதும், இங்கு உள்ளவர்கள் எங்களை வாழ்த்தியதும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஆனாலும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெறாமல் இருப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்தனர். மேலும் இங்கு பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் தங்களது குடும்பங்களுடன் போராட்டத்தில் இணைந்துள்ளனர். மத்திய அரசு எங்களது நிலைமையை புரிந்து உடனடியாக சட்டத்தை வாபஸ் வாங்கினால் மகிழ்ச்சி கொள்வோம் என்று தெரிவித்தார்.