அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண் ஒருவர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வசிப்பவர் பாபுலால். இவருடைய மகள் துர்க்காதேவி. இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. துர்காதேவி அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் துர்கா தேவி வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பைக்கில் தன்னுடைய தந்தையுடன் சென்று இருக்கிறார். அப்போது ரோட்டை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி ஒன்று பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.
இதில் துர்கா தேவி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதை கண்ட அவருடைய தந்தை காயத்துடன் கதறி அழுதுள்ளார். எனவே அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குப்பை லாரிகள் மற்றும் தண்ணி லாரிகள் இதுபோன்று விபத்து அடிக்கடி ஏற்படுத்துவதாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.