Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமியின் திருமணம்… இஸ்லாமிய விதிப்படி தப்பில்லை… புது மண தம்பதிகளுக்கு பாதுகாப்பு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் இஸ்லாமிய மத சட்டப்படி பூப்படைந்த 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுமி தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாபில் 17 வயதான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 21ஆம் தேதி 36 வயது ஆண் நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு மணப்பெண்ணின் 17 வயதை காரணம் காட்டி அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் இந்த பிரச்சனை குறித்து தீர்வு காண புதுமண தம்பதியினர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை நீதிபதி அல்கா சரின் அமர்வு விசாரித்துள்ளது. அப்போது இஸ்லாமிய மத சட்டம் 195 விதியின் படி பெற்றோர் அல்லது காப்பாளர் சம்மதத்தோடு, மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பூப்படையாத 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பூப்படைந்து 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம் எனவும், ஒருவேளை அந்த சிறுமிக்கு அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் அந்த திருமணமானது ஏற்றுக்கொள்ளப்படாது என சட்டத்திலிருப்பதை நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த இஸ்லாமிய சட்ட விதிமுறைகளின் படி இவர்களின் திருமணம் அங்கீகரிக்கப்பட்டது. எனவே இந்தத் தம்பதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் இரு வீட்டு குடும்பத்தினரும் தலையிட உரிமை இல்லை எனவும், காவல்துறையினர் இந்த புதுமணத் தம்பதியினருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |