நடிகை நயன்தாராவிற்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.
நடிகை நயன்தாராவின் தந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் குடும்பத்தினரின் நிர்பந்தத்தின் காரணமாக நடிகை நயன்தாரா திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாக தெரியவந்துள்ளது. ஆகையால் அடுத்த ஒரு சில மாதங்களில் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.