காலத்தே பயிர் செய்! என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வாக்கின்படி திரும ணத்திற்குரிய வயதுடைய ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் குழந்தைபேறு கிடைக்க வேண்டும். குழந்தை பேறு என்பது அற்புத வரம் ஆகும். இந்த அற்புதவரம், திருமணம் ஆன எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை.
ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் இம்முறையை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் உண்டு. வாழை மரத்தின் அடித் தண்டை அறுத்து அதில் குழி செய்து, அதில் கொஞ்சம் நவச்சாரம் பொடி போட்டு அதை நன்றாகப் பாதுகாப்புடன் மூடி, காலையில் வாழைத் தண்டில் ஊறிய நீரை எடுத்து ஆண் பெண் இரு பாலரும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சுமார் 2 மாதங்கள் குடித்து வந்தால் நிச்சயமாக குழந்தைச் செல்வம் உண்டாகும்