அமெரிக்க நாட்டில் சுமார் 300 கிலோ எடையுடைய மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் நடந்திருக்கிறது.
அமெரிக்க நாட்டில் தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த 36 வயதுடைய டாமி ஸ்லேடன் என்ற கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த பெண் அதிக பருமன் கொண்டவர். அவர் ஏறக்குறைய 300 கிலோ எடை உடையவர். இந்நிலையில், அவரை போன்றே பருமனான கலீப் வில்லிங்டன் என்ற நபருடன் அவருக்கு திருமணம் நடந்திருக்கிறது.
டாமி ஸ்லேடன் தெரிவித்திருப்பதாவது, டாமி ஸ்லேடன் என்று தான் என்னை பலருக்கும் தெரியும். இனிமேல் திருமதி. டாமி வில்லிங்டன் என்று கூறியிருக்கிறார். இருவரும் திருமணத்தின் போது முத்தமிட்டு கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.