Categories
தேசிய செய்திகள்

திருமணமான 6 மணி நேரத்தில்… இப்படி ஆகுமென்று நினைச்சு கூட பாக்கல… கதறி அழுத கணவன்…!!

பீகார் மாநிலத்தில் திருமணமான 6 மணி நேரத்தில் மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமணம் மற்றும் இறப்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமணத்திற்கு 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பீகார் மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி கொரோனா வழிகாட்டுதலுடன் ரமேஷ் மற்றும் நிஷா என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. அவர்கள் மத சடங்குகளுடன் திருமணம் நடந்துமுடிந்தது.

திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் நிஷாவிற்கு உடல் நலக்குறைவு காரணமாக சோர்வாக இருந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் கூறியுள்ளனர். அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது நிஷா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 9ஆம் தேதி காலை அவரது உடலுக்கு சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. திருமணமான 6 மணி நேரத்தில் மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |