Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பையை வென்றால் தான்….. கல்யாணம் பண்ணுவேன்…. முன்னணி கிரிக்கெட் வீரர் பேட்டி….!!

உலகக் கோப்பையில் தங்களது நாட்டு அணி வெற்றி பெற்றால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிரபல கிரிக்கெட் வீரர் பேட்டி அளித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் உலகக்கோப்பை என்பது பல நாடுகளுக்கு வெறும் கனவாகவே இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே கோப்பைகளை அதிகம் தட்டிச் சென்றுள்ளனர். அதிலும் சவுத் ஆப்பிரிக்கா போன்ற பலம்பொருந்திய அணிகளால் கூட உலகக்கோப்பையை வெல்ல முடிவதில்லை. இந்நிலையில் உலகக்கோப்பையில் தங்களது நாடு எப்போது வெற்றி பெறுகிறதோ அப்போதுதான் எனக்கு திருமணம் என ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரரான ரஷித் கான் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இவரது பேட்டியை சமூகவலைதளத்தில் பலரும் கிண்டல் கேலி செய்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அணி கடந்து 2015,2019 ஆகிய இரண்டு வருடங்கள் மட்டுமே உலக கோப்பையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பையில் வெற்றி பெறுவதற்கு பல வருட அனுபவம் கொண்ட பல திறமையான அணிகள் களத்தில் இருக்கும் பட்சத்தில், ரஷீத் கானின் இந்த துணிச்சலான பேட்டி நகைக்கும் பாணியில் இருந்தாலும், அவரது மன தைரியத்தை பாராட்டியும் கருத்துக்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

 

Categories

Tech |