புதுச்சேரி அருகே மனைவி கோபித்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழ சாத்தமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த சுகுமார் என்பவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கீதா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவரின் மனைவி கீதா கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மனைவி கோபித்து சென்றதால் சுகுமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தற்கொலை முடிவை கையிலெடுத்த சுகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கோபித்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.