செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது இன்சைட் லேண்டரில் பதிவானதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அமைப்பினர் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள இன்சைட் லேண்டர் என்னும் தானியங்கி விண்கலத்தை அனுப்பியது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதை இந்த இன்சைட் லேண்டர் கண்டறிந்துள்ளது.
இந்த நிலமாடுக்கமானது ரிக்டர் அளவில் 4.2 ஆகவும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் போது இன்சைட் லேண்டர் 8,500 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்ததுள்ளது. குறிப்பாக இந்த இன்சைட் லேண்டரில் முதல் முறையாக மிக நீண்ட தொலைவிலிருந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கண்டறியப்பட்டது நாசா விஞ்ஞானிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரே மாதத்தில் செவ்வாயில் ஏற்பட்ட 3 வது நிலநடுக்கம் இதுவே ஆகும்.
இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி அன்று இரண்டு நிலநடுக்கங்கள் 4.2 மற்றும் 4.1 என்ற ரிக்டர் அளவுகளில் பதிவானது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கமானது கடந்த இரண்டை விட 5 மடங்கு ஆற்றல் மிக்கது என்று நாசா கூறியுள்ளது. தற்போது நாசாவின் விஞ்ஞானிகள் நிலநடுக்கம் ஏற்பட்ட மைய பகுதியினை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.