Categories
உலக செய்திகள்

மறுபடியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவங்களா…. நீதிபதியாக நியமிக்கப்படும் பெண்…. பரிந்துரை செய்யும் பிரதமர் …!!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக நியமிக்க  அந்நாட்டுப் பிரதமர் பரிந்துரை செய்துள்ளார்.

அமெரிக்க நாட்டில்  ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சரளா வித்யா நாகலா என்ற பெண்ணை நியமிக்க அந்நாட்டு பிரதமர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்தப் பெண் சிவில் உரிமை வழக்கறிஞர் ஆவார். இந்தப் பரிந்துரையை செனட் சபை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்து உள்ளதால் ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.செனட் சபையில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளுக்கு தலா 50 இடங்கள் உள்ளன.

ஆனால் பெரும்பான்மையான வாக்குகளை தீர்மானிக்க ஜனாதிபதியும் ஓட்டு போட முடியும். எனவே 51 வாக்குகளுடன் சரளா வித்யா நாகலாவை நீதிபதியாக நியமிக்க செனட் சபையால் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய வம்சாவளியை சேர்ந்த சரளா வித்யா நாகலா கடந்த 2017 முதல் இதே கனெக்டிகட் மாவட்ட அட்டார்னியின் அலுவலகத்தில் குற்றவியல் பிரிவில்  துணைத்தலைவராகவும் 2012-ம் ஆண்டு அமெரிக்க அட்டார்னி அலுவலகத்தில் அருவெறுக்கத்தக்க குற்றங்கள் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் பணியாற்றியுள்ளார் . மேலும் இவர் 2008-09 கால கட்டத்தில்     9-வது அப்பீல் நீதிமன்றத்தில் நீதிபதி சூசன் கிராபரின் சட்ட எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

 

Categories

Tech |