அமேசான் தலைமை செயல் அதிகாரியின் முன்னாள் மனைவி பள்ளி ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃ ப் பெசோஸ் கடந்த 1993 ஆம் ஆண்டு மெக்கன்ஸி ஸ்காட் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகுதான் இருவரும் சேர்ந்து அமேசான் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர். மெக்கன்ஸி முதல் ஊழியர் குழுவில் தலைவராக பணியாற்றி வந்தார்.அதன் பின் திருமணமாகி 26 ஆண்டுகள் கடந்த நிலையில் திடீரென இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2019 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
மெக்கன்ஸியை விவாகரத்து செய்ததால் இருவரும் தொடங்கியா அமேசான் பங்குகளிலிருந்து 25% ஜெஃ ப் பெசோஸ் அளித்தார். இதனால் மெக்கன்ஸி உலகின் 21 ஆவது பெரும் பணக்காரராகவும் உலகின் பணக்கார பெண்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இதனையடுத்து சீயாட்டிலைச் சேர்ந்த டான் ஜீ வெட் என்ற அறிவியல் ஆசிரியர் ஒருவரை மெக்கன்ஸி மறுமணம் செய்து கொண்டார்.Giving Pledge என்ற உழைப்பிற்கு மெக்கன்ஸி எழுதிக்கொடுத்த உறுதிபத்திரத்தின் மூலமாக இந்த தகவல் வெளியாகி உள்ளது.
எனக்கு மிகவும் தெரிந்த தாராளமான மற்றும் மிகக் கனிவான ஒருவரை மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்டதாக டான் ஜீவெட் கூறினார். மற்றவர்களுக்காக சேவை செய்து நிதியை அளிக்கும் மகத்தான உறுதிப்பாட்டில் மெக்கன்ஸியுடன் இணைகிறேன் என்று கூறியுள்ளார் . அமேசான் தலைமை அதிகாரி ஜெஃ ப் பெசோஸ் தனது முன்னாள் மனைவியின் திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்தை தெரிவித்தார். டான் ஒரு சிறந்த மனிதர் எனவும் இருவரும் திருமணம் செய்து கொண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியதாக அமேசான் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.