முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லையில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியத்திற்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சுப்பிரமணியன் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் சுப்பிரமணியத்தை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.