மருந்தகத்தில் வாங்கிய மாத்திரையில் புழு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் பகுதியில் அன்பு வசித்து வருகிறார். இவர் காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்பட்டு குணம் அடைவதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பின் அவர் பரிந்துரை செய்த மாத்திரையை வாங்க பொன்னேரி பகுதி அடுத்த ஏலகிரி மலை செல்லும் சாலையில் இருக்கும் ஒரு மருந்து கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வாங்கிய மாத்திரையை உடைத்து பார்க்கும் போது மாத்திரையில் இறந்த நிலையில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது பற்றி சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சென்று கேட்ட போது மொத்தமாக நிறுவனத்திடம் இருந்து வாங்கிய மாத்திரையில் புழு இருந்ததற்கு நான் பொறுப்பாக முடியாது என கூறியுள்ளார். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கம்பெனியிடம் இது பற்றி புகார் தெரிவிக்கின்றனர் என உரிமையாளர் தெரிவித்திருக்கிறார். மேலும் இது பற்றி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.