மருந்து கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் வைத்து தலீபான்கள் கடத்தியதாக சீக்கிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கடந்த மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றினர். இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். மேலும் சிலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பன்சிரிலால் அரெண்டே என்பவர் தனது குடும்பத்தை டெல்லியில் விட்டுவிட்டு ஆப்கானிஸ்தானில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதனையடுத்து நேற்றிரவு 8 மணியளவில் பன்சிரிலால் அரெண்டே வேலை செய்து கொண்டிருக்கும் போது தீடிரென துப்பாக்கியுடன் தலீபான்கள் வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்களை தலீபான்கள் கடத்தியுள்ளனர். இதன் பிறகு தலீபான்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்த ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு பன்சிரிலால் அரெண்டேவை கடத்தி சென்றதாக ஆப்கானில் இருக்கும் சீக்கிய அமைப்பினர் கூறியுள்ளனர். மேலும் கடத்தப்பட்ட இந்தியரை பாதுகாப்பாக மீட்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக அவரை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.