Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்து குடோனிலிருந்து வெளி வந்த கரும்புகை… உள்ளே சென்று பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி….!!

கோவையில் மருந்து குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உழவர் சந்தை அருகே பிரபல மருந்து கடையின் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மொத்தமாக வைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் இன்று அதிகாலையில் குடோனிலிருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மளமளவென்று குடோன் முழுவதும் நெருப்பு பரவ தொடங்கியுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடோனின் காவலாளிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். இதில் குடோன் முழுவதும் சேதமடைந்தது.

மேலும்  பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்த சாதாரண மருந்துகள்  முதல் உயிர் காக்கும் மருந்துகள் வரை முற்றிலும் எரிந்து நாசமானது. தீயில் கருகிய மருந்துகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்றதா அல்லது மர்ம நபர்கள் செய்த நாச வேலையா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |