Categories
உலக செய்திகள்

மறுபடியுமா…..!! 2377 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதி…. பிரபல நாட்டில் பரபரப்பு…..!!!!

சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகின்றது. 

சீனா நாட்டில் உகான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தான் கொரோனா நோய் தொற்று உலகிலேயே முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வரலாறு காணாத அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இப்பகுதியில் நேற்று மட்டுமே 2105 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அந்நாட்டின் உள்ளூர் நகரங்களில் 2898 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அறிகுறி இல்லாத கொரோனா நோய் தொற்றானது 2377 பேருக்கு உறுதியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் கொரோனா நோய் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது 5226 ஆக உள்ளது. மேலும் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா நோய் தொற்றானது 5 லட்சத்து 59 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |