தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை நேற்று முன் தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விஷயம் தான் தேசிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஜெயலலிதா பேசிய ஆடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது ஏற்கனவே வைரலாகி பல்வேறு சந்தேகங்களை, சர்ச்சைகளை கிளப்பிய ஆடியோ தான் என்பதே மறுப்பதற்கில்லை. இருப்பினும் மீண்டும் வைரலாவதால் அதிமுகவினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் . இதற்கிடையில் மருத்துவர் சிவகுமார் பதில் அளித்து வருகிறார். இருப்பினும் இந்த ஆடியோ உண்மையானதா என்பது உறுதிப்படுத்தாமல் இருக்கிறது. உடன் இருப்பது மருத்துவர் சிவகுமார் தானா? மற்றொரு பெண் குரல் யாருடையது? சசிகலாவா? என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து எப்படி இருந்த அரசியல் ஆளுமையின் கம்பீரக் குரலை இப்படி கேட்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையில், சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இவர்கள் மீது அடுத்த கட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த விஷயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்படி கையாள போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறி உள்ளது. ஏனென்றால் லிஸ்டில் இருப்பவர்கள் அனைவரும் மிக செல்வாக்கு பெற்றவர்கள். எனவே இவர்களிடம் உரிய விசாரணை நடத்திக் குற்றவாளிகளை தண்டிக்க வழி செய்ய எடப்பாடி பழனிச்சாமி முயற்சிக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு சட்டப்பேரவையில் நாற்காலிக்கு சண்டை போடக்கூடாது என்று நெடிசன் பதிவிட்டு வருகின்றனர். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை அளவு பணி செல்வதற்கு தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சசிகலாவின் பெயர் குற்றவாளி ரேஞ்சுக்கு இடம் பெற்றிருப்பதால் அவருடன் கைகோர்க்க னவிருந்த திட்டம் தவிடு பொடியானது. இருப்பினும் இந்த விஷயத்தை சட்டப்படி சசிகலா எதிர்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்கோஷ்டியை சமாளிக்க யோசித்து வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ரூட் கிளியர் ஆனது. இனி அவர் அடிச்சி ஆட வேண்டியது தான் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.