Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

தாய் தனது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள பரும்பு வேம்படி பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மூன்றரை வயதுடைய கலைமதி, அன்னலட்சுமி, என்ற இரட்டைக் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பார்வதியின் அண்ணன் மகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனால் பார்வதி தனது கணவரிடம் மருத்துவமனைக்குச் சென்று தனது அண்ணன் மகளை பார்த்து வருவதாக கூறியுள்ளார். அதற்கு கண்ணன் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின் கண்ணன் கை, கால்களை கழுவுவதற்காக வீட்டின் பின்புறம் சென்று விட்டார்.

இந்நிலையில் கோபமடைந்த பார்வதி திடீரென வீட்டுக்குள் சென்று தன் மீதும் தனது குழந்தைகளின் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் குழந்தைகள் வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டுள்ளனர். இந்த அலறல் சத்தத்தை கேட்ட கண்ணன் உடனடியாக விரைந்து சென்று குழந்தைகளின் மீது தீப்பற்றி எரிவதை கண்டுஅதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தண்ணீரை எடுத்து குழந்தைகளின் மீது ஊற்றி தீயை அணைத்துள்ளார். அதன்பிறகு தனது மனைவியான பார்வதியை பார்க்கச் சென்றபோது அவர் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த குழந்தைகளை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து காவல்துறையினர் பார்வதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |