Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வரும் மருதநாயகம்….. ஹீரோ யாருன்னு தெரியுமா….? வெளியான சுவாரஸ்ய தகவல்….!!!

விரைவில் மருதநாயகம் படத்தை கமல்ஹாசன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, இவர் இயக்கியும் நடித்தும் உருவாகி வந்த திரைப்படம் ”மருதநாயகம்”. இவரின் கனவு திரைப்படமான இந்த திரைப்படம் பாதியிலேயே நின்றது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்தது.

யாரிந்த மருதநாயகம்? நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய வரலாற்றின் இரகசிய  உண்மைகள்! | Who is Maruthanayagam? Facts To Know About Him! - Tamil BoldSky

மீண்டும் மருதநாயகம் திரைப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர். சில மாதங்களுக்கு முன் கமல் இனி மருதநாயகம் படத்தில் வேறு ஒருவர் தான் ஹீரோவாக நடிக்க முடியும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விரைவில் கமல்ஹாசன் இந்த படத்தை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலுக்கு பதிலாக இந்த திரைப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Categories

Tech |